ரஷ்யா தன் நாட்டுத் தேவைகளுக்காக வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை

by Admin / 28-03-2026 11:01:14am
ரஷ்யா தன் நாட்டுத் தேவைகளுக்காக வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை

ரஷ்யா தன் நாட்டுத் தேவைகளுக்காக வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஏற்றுமதி தடையானது ஏப்ரல் 1 முதல் தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை நான்கு மாதங்களுக்கு அமுதில் இருக்கும் என்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றும் காரணமாக உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யவும் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் ஏப்ரல் 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை உருவாக்குமாறு எரிசக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் எரிசக்தி வளங்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை இருந்தாலும் உள்நாட்டு நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் விலை ஏற்றத்தில் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டிய அவசியத்தின் காரணமாக ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories