கும்பகோணத்தில் தயாராகும் பிபின் ராவத் ஐம்பொன் சிலை

by Editor / 21-01-2022 09:18:24am
கும்பகோணத்தில் தயாராகும் பிபின் ராவத் ஐம்பொன் சிலை

நீலகிரி மாவட்டம், குன்னுாரில், கடந்த டிசம்பர் 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர்  உயிரிழந்தனர்.இதில் பிபின் ராவத்தின் வீரத்தை போற்றும் விதமாக, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் 'ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோஷியல் வெல்பேர் பவுண்டேஷன்' சார்பில், 120 கிலோ எடையில் அவரது மார்பளவு ஐம்பொன் சிலையை டில்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைப்பதற்காக கும்பகோணத்திலுள்ள உள்ள சிற்பக்கூடத்தில் ஆர்டர் செய்யப்பட்டு அவரது சிலை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. 

 

Tags :

Share via

More stories