வேன் கவிழ்ந்து விபத்து.. 10க்கும் மேற்பட்டோர் காயம்

சீர்காழி - புவனகிரி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கம்மாபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் என தெரியவந்துள்ளது. 20 பேருடன் வேன் சென்ற போது டயர் திடீரென வெடித்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :