விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல்

by Staff / 28-09-2023 11:49:24am
விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல்

பொள்ளாச்சி நகரில் மகாலிங்கபுரம், நியூஸ்கீம் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து விதிமுறையை மீறிய கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் சாந்திநிர்மலாபாய் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் சென்று மகாலிங்கபுரத்தில் உள்ள ஒரு டீக்கடை செயல்பட்டு வந்த கட்டிடம் விதிமுறைகளை மீறியதாக நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கோட்டூர் ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் விதிமுறை மீறப்பட்டு உள்ளதாக கூறி நகரமைப்பு அதிகாரிகள் சீல் வைக்க சென்றனர். அப்போது அங்கு அதிகாரிகளுடன் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo