சிறுமி சடலமாக மீட்பு மரணம் தீ விபத்தால் ஏற்பட்டுள்ளது என டி.ஐ.ஜி தகவல்.

கொடைக்கானல் அருகே பாச்சலூர் கிராமத்தில் சத்யராஜ் - பிரியா தம்பதியினரின் மகள் 11வயது இவர் பள்ளிக்கு சென்ற நிலையில் பல்கலையின் பின்பக்கம் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.அவரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மேலும் சிறுமி எரிக்கப்பட்ட இடத்தில் தீப்பெட்டி, பெட்ரோல் கேன் மற்றும் சிறுமியின் வாயை துணியை வைத்து அடைக்கப்பட்டும் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோரும், கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர் உடனடியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு தொடர்புடைய இடங்களில் தடய அறிவியல் துறை மற்றும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி விஜய குமாரி தீவிர விசாரணை. மேற்கொண்டார்.முதற்கட்ட விசாரணையில் சிறுமி உடலில் பாலியல் துன்புறுத்தலுக்கான தடயங்கள் இல்லை; மரணம் தீ விபத்தால் ஏற்பட்டுள்ளது என டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.சிறுமியை தீவைத்து எரித்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :