குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு.

by Editor / 28-05-2025 09:49:09am
குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டு வரும் நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கானது ஏற்பட்டுள்ளது.

 குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம்  பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருகின்றனர்.

 குறிப்பாக, 4-வது நாளாக இன்றும் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மலைப்பகுதிகளில் மழை குறைந்து, அருவிகளில் தண்ணீர் குறையும் பட்சத்தில் உடனடியாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு.

Share via