முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்ற காவல்

by Admin / 06-01-2022 11:57:12am
முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்ற காவல்

ஆவினில் வேலை வாங்கி  தருவதாகக்கூறி  மூன்று கோடி பத்து லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைது செய்யப்பட்டு,விருதுநகர் மாவட்ட குற்ற பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டார்.நீதிபதியின் ஆறு மணிநேர தீவிர விசாரணைக்கு பின்  மதுரை மத்திய சிறையில் 15நாட்கள் நீதி மன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.ராேஜந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த பா.ஜ.க. மாவட்டத்தலைவர்,அ.தி.மு.க விருதுநகர் தொழில் நுட்ப பிரிவு செயலர் உள்ளிட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தபடவுள்ளனர். ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர்,தலைமறை அவமானகரமான செயல்அல்ல என்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரியிப்பதாலும் அரசின் பழி வாங்கும் போக்கு காரணமாகவே தலைமறைவு என்றும் இது தனிமனித உரிமையின் பாற்பட்டது என்றும் தகவல்.

 

Tags :

Share via