பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோவாக பதிவு செய்த இளைஞர் கைது
சிவகங்கை கொட்டகுடி பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் இளம்பெண்களை குறிவைத்து நட்பாக பேசி பழகி வந்துள்ளார். இதில் சில பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து அதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதனடிப்படையில் காளீஸ்வரனை கைது செய்த மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோவாக பதிவு செய்த இளைஞர் கைது



















