பூரி ஜெகன்நாத் கோவிலில் இன்று காலை ரத உற்சவம் தயார் நிலையில்...

by Editor / 07-07-2024 10:09:13am
பூரி ஜெகன்நாத் கோவிலில் இன்று காலை ரத உற்சவம் தயார் நிலையில்...

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புரி கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது புரி ஜெகன்நாதர் ஆலயம் (Puri Jagannath Temple) . இந்த கோயிலின் ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பர். இந்த ரத யாத்திரை திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறுவைத்து வழக்கமாக இருந்துவருகிறது.
 
ஒடிசா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம் விளங்குகிறது. அதோடு இங்கு நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. ரத யாத்திரை திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வர்.

ரத யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஆசாட மாதம் எனும் (ஆடி மாதம்) இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். இந்த தேரோட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர்கள் செய்யப்படுகிறது.

இந்த கோவிலில் நடைபெறும் தேர்த் திருவிழாவின் போது பூரி மன்னரின் பரம்பரைச் சேர்ந்தவர்கள், தங்கத்தினால் ஆன துடைப்பத்தைக் கொண்டு தேர் வலம் வரும் சுறுப் பாதையை தெருவையும் சுத்தம் செய்வார்களாம். இந்த தெர் திருவிழாவிற்ஆக ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக தேர்கள் செய்யப்படுகிறது. குறிப்பிடத்தக்கது.பூரி ஜெகன்நாத் கோவிலில் இன்று காலை ரத உற்சவம் தொடங்கப்படவுள்ளதால்  தேர்கள் எல்லாம் எல்லாம் தயார் நிலையில் உள்ளது.

 

Tags : பூரி ஜெகன்நாத் கோவிலில் இன்று காலை ரத உற்சவம் தயார் நிலையில்...

Share via