வடக்கு ஆப்கானிஸ்தானில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

by Admin / 04-11-2025 05:53:00am
வடக்கு ஆப்கானிஸ்தானில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு ஆப்கானிஸ்தானில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.. பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீஃப் நகருக்கு மேற்கே 28 கிலோமீட்டர் (17.4 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.. உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது..நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் மற்றும் மண்ணால் ஆன வீடுகள் இடிந்து விழுந்தன. பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.. ஐக்கிய நாடுகள் சபையின் குழுக்கள் மற்றும் உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. ஆப்கானிஸ்தான் புவித்தட்டுகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

Tags :

Share via