பாடப் புத்தகங்கள் விற்பனை - சில்லறை வணிகர்களுக்கு அனுமதி

by Editor / 17-10-2021 10:45:34am
பாடப் புத்தகங்கள் விற்பனை - சில்லறை வணிகர்களுக்கு அனுமதி

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய சில்லறை வணிகர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் & கல்வியியல் பணிகள் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. சட்டப்படி பதிவு செய்த வணிக நிறுவனங்கள், கடைகள் மூலம் பாடப்புத்தகங்களை விற்க அனுமதி பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே, விருப்பம் உள்ளவர்கள் http://textbookcorp.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 5-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்று தமிழ்நாடு பாடநூல் & கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via