விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜூலை 18 அன்று கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் ,சட்டமன்ற கதவுகளை பூட்டினால், முதலமைச்சரின் எலும்புகள் உடைக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கும் வகையில்- அவதூறாக பேசிய குற்றச்சாட்டினை அடுத்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுமதி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அவருக்கு எதிராக 351, கொலை மிரட்டல் விடுத்தல், 352 அமைதியை குறைக்கும் நோக்கில் அவமதிப்பு 353(2) பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கரும்பு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது த.வெ.க அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக விமர்சித்து உள்ளது.
Tags :



















