வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன் பறிப்பு

by Staff / 26-10-2022 05:31:17pm
 வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன் பறிப்பு

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் 18 வயதான அனோஜ்குமார் இவர்  கோயமுத்துர் அருகே உள்ள போத்தனூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றார், நேற்று இவர் தனது நண்பர்கள், இரண்டு பேருடன் அங்குள்ள பிள்ளையார்புரம் காட்டுப்பகுதியில் நடந்து சென்றுள்ளார், அப்பொழுது அங்கு வந்த நான்கு பேர் இவர்களை வழிமறித்து பீடி கேட்டுள்ளனர், பின்னர் செல்போனை கேட்டுள்ளனர், செல்பொனை, தர, மறுத்ததால் நான்கு பேரும் சேர்ந்து பீர் பாட்டிலை, கொண்டு அனோஜ் குமார் தலையில் தாக்கினார், பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர், இது குறித்து, அனோஜ் குமார், போத்தனூர் போலீஸ் புகாரளித்தார், போலீசார் வழக்கு பதிவு, செய்து வட மாநில வாலிபரின் தலையில் பீர் பாட்டிலால் அடித்து செல்போனை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories