கோயில் விழா ஜாதி மோதல் வடகாட்டில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு.

புதுக்கோட்டையில் உள்ள வடகாட்டில் சமீபத்தில் நடந்த கோயில் விழாவின்போது எற்பட்ட ஜாதி மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், "வரும் மே 19-ம் தேதி வடகாடு ஜாதிவெறி ஆட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நாம் தொடுத்த வழக்கில், விசிக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கும் படி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது" என விசிக தலைவர் திருமாவளவன் X தளத்தில் தெரிவித்துள்ளார்.
Tags : கோயில் விழா ஜாதி மோதல் வடகாட்டில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு.