பின்வாங்கிய ஜியோ
இணையத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு திடீரென கட்டணத்தை உயர்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனத்தை விட்டு ஏராளமான வாடிக்கையாளர்கள் அலைபேசி எண்ணை புதுப்பிக்காமல் விட்டதால் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப சில மாற்றங்களை செய்துள்ளது 3 குறைந்தவிலை ரீசார்ஜ் திட்டங்களை பார்ப்போம். மூன்றிலுமே வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒருநாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கிறது. ரூ.199 ரீசார்ஜ் திட்டம்: கால அளவு - 18 நாட்கள், டேட்டா - 27 ஜிபி (ஒரு நாளைக்கு 1.5 ஜிபி). ரூ. 209 ரீசார்ஜ் திட்டம்: ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா வீதம் மொத்தம் 22 நாட்கள் கால அளவு. ரூ. 239 ரீசார்ஜ் திட்டம்: கால அளவு - 22 நாட்கள் டேட்டா - 33 ஜிபி டேட்டா, (ஒரு நாளைக்கு 1.5 ஜிபி).இருப்பினும் வாடிக்கையாளர்கள் இன்னும் மனமாற்றம் இல்லாமல் உள்ளனர்.பி.எஸ்,என்.எல்.வாடிக்கையாளர்களாக மாறியதால் இந்த விலைகுறைப்பு திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
Tags : பின்வாங்கிய ஜியோ