தூத்துக்குடியில் மாணவரிடம் ஜாதி ரீதியாக பேசிய விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியைகள் இருவர் பணியிடை நீக்கம்

by Staff / 16-06-2022 04:07:16pm
தூத்துக்குடியில் மாணவரிடம் ஜாதி ரீதியாக பேசிய விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியைகள் இருவர்  பணியிடை நீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மாணவரிடம் ஜாதி ரீதியாக பேசிய விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியைகள் இருவர்   பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.குளத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றிய கலைச்செல்வியும் கணினி ஆசிரியராக பணியாற்றிய மீனாவும் அதே பள்ளியில் பயிலும் மாணவரிடம் ஜாதி உணர்வை தூண்டும் வகையில் பேசிய ஆடியோ அண்மையில் வெளியாகிய. இதனை அடுத்து ஆசிரியர்கள் இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம்  செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo