என்ன நடக்குது..அதிமுகவில்..தொண்டர்கள்..கலக்கம்.

தேனி மாவட்டம் போடியில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.இக்கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் ஏந்தி நின்ற பதாகைகளால் அதிமுகவில் புது பூகம்பம் வெடித்துள்ளது. அந்த பதாகைகளில், "நரிகளுக்கு என்ன வந்தது கேடு! உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு! அதிமுக உங்களோடு! நீங்க மட்டும் போதும் தலைவா" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த பதாகைகளை தயாரித்து விநியோகம் செய்தது யார்..என்ற கேள்வியும்.. அதிமுகவை மீண்டும் உடைப்பதற்கான முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த நிலையில் தென்மாவட்டடத்த்தை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்பஅணியின் முக்கிய பொறுப்பாளர் செங்கோட்டையனைப்பற்றி பதிவுகளை பதிவிட்டுள்ளதும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Tags : என்ன நடக்குது..அதிமுகவில்..தொண்டர்கள்..கலக்கம்.