தமிழ்நாட்டில் 24.37% வாக்குப்பதிவு

by Staff / 19-04-2024 12:25:08pm
தமிழ்நாட்டில் 24.37% வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் நிலையில் வாக்காளர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது 11 மணி நேர நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 15.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

Tags :

Share via