இலங்கையில் விண்ணை முட்டும் அளவுக்கு மருந்து பொருட்கள் விலை உயர்வு மக்கள் கவலை

இலங்கையில் எரிபொருளை தொடர்ந்து மருந்து பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து காணப்படுகிறது. உள்ளூர் சந்தையில் மருத்துவ உபகரணங்கள் 3 முதல் 4 மடங்கு விலை அதிகரித்து விற்கப்படுவதால் மக்கள் திணறி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துப்பொருட்கள் கையிருப்பு இல்லாததால் தனியார் மருந்துகளில் மருந்துகளை வாங்கிக்கொண்டு சிகிச்சைக்காக மக்கள் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :