குடியரசு தலைவருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு 

by Editor / 31-07-2021 12:00:13pm
குடியரசு தலைவருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு 

 தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா தலைமை செயலகத்தில் வருகிற 2-ந்தேதி நடக்கிறது. இந்த விழாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படுகிறது. கருணாநிதி படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அதன்படி கருணாநிதி படத்திறப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் பங்கேற்கிறார். 
இந்த நிலையில்  நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ஜனாதிபதியிடம் நேரில் வழங்கக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு டெல்லி  சென்றார்.  


சனிக்கிழமைகாலை 11.15 மணியளவில் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து அழைப்பிதழை அளித்தார். 

 

Tags :

Share via

More stories

Logo