சொத்துக்காக லாரி ஓட்டுனரை கொலைசெய்த கள்ளக்காதலி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பக்காளியூர் அருவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் சுப்பிரமணி. இவரது மனைவி சரஸ்வதி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கடந்த ஒரு வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி கலைவாணியுடன் லாரி ஓட்டுனர் சுப்பிரமணி. சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஓட்டுனர் சுப்பிரமணிக்கு முதல் மனைவி மூலம்1 மகளும்1 மகனும் உள்ளனர். ஓட்டுனர் சுப்பிரமணியோடு குடும்பம் நடத்திய கலைவாணிக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தற்பொழுது சுப்ரமணியின் பூர்வீக சொத்து பாகம் பிரிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த சொத்தை தனக்கு தான் தர வேண்டும் என கலைவாணி ஓட்டுனர் சுப்பிரமணியோடு தினசரி தகராறில் ஈடுபட்டதால் கடந்த வாரம் சுப்பிரமணி தனது மகள் ஜீவிதாவிடம் அலைபேசி மூலம் தினசரி சொத்து கேட்டு கலைவாணி தகராறில் ஈடுபட்டு வருவதால் நிம்மதி இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் சுப்பிரமணிக்கும் அவரது கள்ளக்காதலி கலைவாணிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கலைவாணி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து சுப்பிரமணியின் முகத்தில் வீசி தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சுப்பிரமணியை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சுப்ரமணி உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து கலைவாணி சங்ககிரி காவல் நிலையத்தில் சரண் அடைந்து தான் சுப்ரமணியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்ததின் பேரில் சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று சடலமாக கிடந்த சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில் சுப்பிரமணியின் முதல் மனைவி மகள் ஜீவிதா தந்தை சுப்பிரமணியின் கள்ளக்காதலி கலைவாணி தினசரி சொத்தைக் கேட்டு தகராறில் ஈடுபட்டதால் தனது தந்தையை கள்ளக்காதலி கலைவாணி அடித்து கொலை செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார். இதனால் சங்ககிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : சொத்துக்காக லாரி ஓட்டுனரை கொலைசெய்த கள்ளக்காதலி