‘அரசுப் பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை’ - எல்.முருகனுக்கு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டமோ, உத்தரவுகளோ இல்லை என மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நீலகிரியில் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக குற்றம்சாட்டி பதிவு வெளியிட்டு இருந்தார். அந்த பதிவை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் இந்த பதில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பள்ளிகளின் வருகைப்பதிவை மேம்படுத்துதல் மற்றும் கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Tags :