பெண்களுக்கு பாலியல் புகாரில் பெங்களூர்வில் தலைமறைவாக இருந்த மதூர் சத்யா கைது

by Admin / 21-03-2026 01:20:27am
பெண்களுக்கு பாலியல் புகாரில் பெங்களூர்வில் தலைமறைவாக இருந்த மதூர் சத்யா கைது

பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பெங்களூரூவில் தலைமறைவாக இருந்த மதூர் சத்யா கைது செய்யப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ .ஐ. ஒய்ஃப்., ஐ .எஸ். சி. யூ. எஃப் ஆகிய அமைப்புகளில் இயங்கி வந்த மதூர் சத்யா புரட்சிகரமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தவர். பல பெண்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்ததை அடுத்து அவர் சி.பி.ஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பெங்களூரில் தலைமறைவாக இருந்த மதூர் சத்யாவை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.. தொடர்ந்து அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட இருக்கிறார்..

 

Tags :

Share via
Logo