கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மந்தித்தோப்பு ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், நாலாட்டின்புத்தூர் கே-ஆர்.நகர் ரயில்வே காலனியைச் சேர்ந்த குணசேகர் மகன் இசக்கிமுத்து (25) என்பதும், கால் கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த மேற்கு காவல் நிலைய போலீசார், அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :