ஊசிமலை பகுதியில் தடையை மீறி சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞா் மீட்பு

by Admin / 21-03-2026 01:14:19am
ஊசிமலை பகுதியில் தடையை மீறி சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞா் மீட்பு

செங்கல்பட்டு, திருப்போரூரை சேர்ந்த சிவகுருநாதன் வியாழக்கிழமை மாலை ஊசிமலை பகுதியில் தடையை மீறி சென்று செல்பி எடுக்க முயன்ற போது நிலை தடுமாறி 180 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்தார். தீயணைப்பு துறை ,வனத்துறை மற்றும் காவல் துறையினர் முதலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அ. ராசாவின் முயற்சியில் ,குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தைச் சேர்ந்த வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அடர்ந்த காடு- இருள் சூழ்ந்த பகுதி- யானை -புலி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் ,மீட்பு பணியை பெரும் சவாலுக்கு உரியதாக மாற்றி இருந்தது. இருப்பினும், ட்ரோன் உதவியுடன் இளைஞர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது .வெள்ளிக்கிழமை அதிகாலை நாலு மணி அளவில் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

Tags :

Share via
Logo