உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், அரக்கோணம் தாலுக்கா இச்சிபுத்தூர் 8வது வார்டு வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தி, புது வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனிவாசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மற்ற வார்டில் உள்ள 120 பேரின் பெயர்கள் தங்களது வார்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளுக்காக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என தெரிவித்தனர். மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags :