சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தகல்யாணமன்னன் கைது.
திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் முதல் மனைவி இறந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உள்ளது. அதன்பிறகு அவர் அடுத்தடுத்து 3 பேரைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகூறி கிருஷ்ணமூர்த்தி காதல் வலையில் விழ வைத்துள்ளார். பின்னர் மகளை காணவில்லை என சிறுமியை பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திவந்த போலீசார் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அடுத்த தள்ளப்பாடி கிராமத்தில் வைத்து இருவரையும் பிடித்தனர். பின்னர் சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக்கூறி கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
Tags : சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தகல்யாணமன்னன் கைது.