எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம்

by Admin / 23-03-2026 07:11:31am
எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம்

இந்தியாவின் எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கச்சா எண்ணெய் பெட்ரோலிய பொருட்கள் இயற்கை எரிவாயு மின்சாரம் மற்றும் புறத்துறைகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விளைவுகள் தங்கு தடையற்ற நிலையை உறுதி செய்யவும் தளவாடங்களை முறைப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது .எதிர்வரும் காரிப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்யவும்  வளைகுடா நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான வழிகளையும் ஆராயவும் ஆணையிட்டார். இந்த நெருக்கடியை கையாள அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து முழு அரசு அணுகுமுறை மூலம் செயல்பட பிரதமர் உத்தரவிட்டதோடு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் உள்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தார்.

 

Tags :

Share via

More stories