இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் என்கிற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி அடைகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் என்கிற பெருமையை அடைகிறார். குஜராத் முதலமைச்சர் ஆகவும் இந்திய பிரதமராகவும் இணைந்து மொத்தம் 8,931 நாட்கள் அவர் பதவியில் இருந்து உள்ளார் .இதற்கு முன் சிக்கிம் முன்னாள் முதல் அமைச்சர் பவன் குமார் ஷாம்லிங் 8,930 நாட்கள் பதிவில் இருந்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ளார். 2021 அக்டோபர் 7ஆம் தேதியில் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து மே 2014 இல் பிரதமராக பதவி ஏற்று தற்பொழுது வரை தொடர்ந்து மக்கள் பணியில் உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்று நீண்ட காலம் பதவி வகித்தவர் என்கிற பெருமையை பெற்றிருந்தார். அந்தச் சாதனையையும் உடைத்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார்.
Tags :

















