நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம்..

by Admin / 27-11-2024 09:35:32pm
நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம்..

நடிகர் இயக்குனர் ,கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட நடிகர் தனுஷ் 2004- ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார். ஐஸ்வர்யா இயக்கிய 3 என்கிற படத்தை இயக்கிய பொழுது தனுஷ் பட கதாநாயகி உடன் நெருக்கமாக இருந்ததின் காரணமாக இருவருக்குள் கருத்து மோதல்கள் உருவாகி அது தொடர்ந்து இருந்தது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் பிரிவதாக சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.. இவர்கள் விவாகரத்து வழக்கு கடந்த வாரம் நடந்த பொழுது இருவரும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று தெரிவித்ததையடுத்து இன்று நவம்பர் 27-ஆம் தேதி அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம்.. இருவருக்கும் இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via