முதல்வருக்கு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் புகழாரம்

by Editor / 23-06-2021 08:54:46am
முதல்வருக்கு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் புகழாரம்

 சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் இதுகுறித்து நன்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவதுகுழந்தையின் அழுகையை கேட்டு அறிந்து பாலூட்டும் தாய் உள்ளம் கொண்ட ஒரு சிறந்த தலைவர். நாட்டை நல்வழிப்படுத்தும் நல்ல அரசர். தாங்கள் வெற்றி பெற்றதை கொண்டாடாமல் உங்களது உடன்பிறப்புகளையும் கொண்டாட விடாமல் மக்களுக்கு சேவை செய்வது போற்றுதலுக்கு உரியது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், கொரோனா நிவாரணமாக நான்காயிரம் ரூபாய் மற்றும் 14 உணவு பொருட்கள், தமிழறிஞர்களே எதிர்பார்க்காத வண்ணம் அவர்களுக்கு தந்த மரியாதை, உயிர் கொல்லியை அழிக்க போராடிக்கொண்டிருக்கும் உங்களது சேவையை சரித்திரம் தானாகவே எழுதிக்கொள்ளும்.

எப்பொழுது பார்த்தாலும் அரசிடமும், வசதி படைத்தவர் இடமும் உதவி கேட்க கூச்சப்படுபவன் கலைஞன். உழைத்து வாழ வேண்டும், உழைத்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இதுதான் படைப்பாளியின் குணம். அவர்களது தேவை அறிந்து சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்ததற்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் தங்களுக்கும் தங்களது அரசு அதிகாரிகள் அனைவருக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர் சார்பில் நன்றி கலந்த வணக்கங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories