சென்னையில் தட்டுப்பாடின்றி பால் விநியோகம் - அமைச்சர்

by Staff / 05-12-2023 04:03:06pm
சென்னையில் தட்டுப்பாடின்றி பால் விநியோகம் - அமைச்சர்

தேவையான அளவு பால் கையிருப்பில் உள்ளது என்று அமைச்சர் மனோ.தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்த அவர், தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்ய தேவையான அளவு பால், பால் பவுடர் கையிருப்பில் உள்ளது. மக்களுக்கு ஆவின் பாலை சீராக கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. சென்னை சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பதனிடும் நிலையங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்களில் இருந்து பால் சென்னைக்கு வரவைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo