மிகவும் நிறைவான ஆண்டுகள் - பிடிஆர் நெகிழ்ச்சி

by Staff / 11-05-2023 02:38:36pm
மிகவும் நிறைவான ஆண்டுகள் - பிடிஆர் நெகிழ்ச்சி

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிடிஆர், 'கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை முதல்வர் தனக்கு வழங்கியதற்கு நன்றி' என குறிப்பிட்டுள்ளார். பிடிஆர் பெயரில் வெளியான ஆடியோ விவகாரம் பெரும் விவாதப்பொருளாக மாறிய நிலையில், பிடிஆர் நிதியமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார்.

 

Tags :

Share via

More stories