பெண்களின் தலைவிதியை 30 ஆண் எம்பிகள் தீர்மானிப்பது சரியா என பிரியங்கா திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளார்.

by Admin / 03-01-2022 03:49:32pm
பெண்களின் தலைவிதியை 30 ஆண் எம்பிகள் தீர்மானிப்பது சரியா என பிரியங்கா திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் இந்த மசோதாவை கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர், விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. 

31 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ள இந்த குழுவின் தலைவராக பாஜகவை சேர்ந்த வினய் சஹஸ்ரபுத்தி உள்ளார். ஆனால் இந்த குழுவில், பெண் எம்.பி.,யாக, திரிணமுல் காங்கிரசை சுஷ்மிதா தேவ் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
 
இந்த நிலையில் பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆய்வு செய்யும் குழுவில் ஒரே ஒரு பெண் எம்பி மட்டும் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது நாடு முழுவதும் உள்ள பெண்களின் வாழ்வை தீர்மானிக்கப்போகும் மசோதாவை ஆய்வு செய்யும் பாராளுமன்ற நிலைக்குழுவில் 30 ஆண் எம்பிகளும், ஒரே ஒரு பெண் எம்பியும் இடம்பெற்றுள்ளனர். 21 வயதில் பெண்கள் திருமணம் செய்யலாமா என்ற பெண்களின் தலைவிதியை 30 ஆண் எம்பிகள் தீர்மானிப்பது சரியா?

இதை கவனத்தில் கொண்டு மசோதாவை ஆய்வு செய்யும் பாராளுமன்ற நிலைக்குழுவில் கூடுதல் பெண் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


 

 

Tags :

Share via