சென்னையில் 1,055 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 21-08-2022 10:26:14am
சென்னையில்  1,055 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை தினம் கொண்டாட்டத்தையொட்டி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,

சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர்நிலைகளில் கலந்துள்ள கழிவுநீர் அகற்றி அவற்றை மீண்டும் தூய்மைப்படுத்தி நீர்நிலைகளாக மாற்றும் பணிகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 1,055 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை மேயராக இருந்தபோதுதான் சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன துரிதப்படுத்தப்பட்டன என்றார்.

 

Tags :

Share via