அதிக விலைக்கு மது விற்றால் நடவடிக்கை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை

by Editor / 14-05-2026 01:48:03pm
அதிக விலைக்கு மது விற்றால் நடவடிக்கை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலிப்பதை தடுக்க நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தவறு செய்யும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க தவறும் மாவட்ட மேலாளர்களும் பொறுப்பாக்கப்படுவார்கள் என்றும், ஆய்வுகளை தீவிரப்படுத்த பறக்கும் படை துணை ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo