காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: கன்னியாகுமரியில் பாதுகாப்பு தீவிரம்

by Editor / 23-04-2025 03:58:37pm
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: கன்னியாகுமரியில் பாதுகாப்பு தீவிரம்

காஷ்மீர் மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை முழுவதும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச புகழ் பெற்ற கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் காவல்துறை அதிகாரிகள் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் அதிகம் கூடிய பகுதிகளில் ரோந்து பணியும் தீவிரமாக நடத்தப்பட்டது.பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

 

Tags :

Share via