புதியதமிழ்கம் கட்சியினர் சாலை மறியல்-கைது.
தென்காசி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தி அமைதிப் பேரணி இன்று மேதினத்தை முன்னிட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பேரணிக்கு அனுமதி காவல்துறை சார்பில் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மேல கடையநல்லூர் அட்டைகுளம் பகுதியில் இருந்து புதிய தமிழகம் கட்சியினர் மாவட்ட செயலாளர் ராசையா தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோ ர் திரண்டு நின்று ஊர்வலமாக பேரணி புறப்பட தயாராகினர் இதனை தொடர்ந்து விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் பேரணி செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறவே புதிய தமிழகம் கட்சி நெருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைதியான முறையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பேரணி செல்வதற்கு ஏன் தடை விதிக்கிறீர்கள் என காவல்துறையினரிடம் புதிய தமிழகம் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாததால் பேரணி செல்வதற்கு அனுமதி இல்லை என காவல்துறையினர் தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த புதிய தமிழகம் கட்சியினர் கடையநல்லூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அட்டைகுளம் அருகே சாயில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக மதுரையில் இருந்து தென்காசி வரும் பேருந்துகளும் தென்காசியில் இருந்து கடையநல்லூர் வழியாக மதுரை செல்லும் வாகனங்களும் சுமார் அரை மணி நேரம் சாலையில் அணிவகுத்து நின்றன பின்னர் சாலை மறியல் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக அங்கு சுமார் அரை மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Tags :