கெஜ்ரிவால் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

by Staff / 30-05-2024 04:02:00pm
கெஜ்ரிவால் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த இடைக்கால ஜாமின் உத்தரவில் சில நிபந்தனைகளும் விதித்தது. இந்த நிலையில் கடந்த மே 27ஆம் தேதி தனக்கு இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்த விசாரணை இன்று நடந்தது. அப்போது, இதற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், விசாரணையை ஜூன் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

 

Tags :

Share via