ரவுடியை வெட்டிக்கொன்ற ஆறு பேர் கும்பல் கைது
தஞ்சை வடக்கு வாசல் பொந்தேரி பாளையம் கங்கா நகரை சேர்ந்தவர் சாமிநாதன் வயது 36 இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன போலீசரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது சாமிநாதனின் அண்ணன் விஜி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார் இந்த கொலைக்கு பலிக்கு பலி வாங்குவதற்காக சாமிநாதன் திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது சாமிநாதன் தஞ்சையில் தங்காமல் வேலூர் மாவட்டத்தில் தங்கி இருந்து வந்தார். அவ்வப்போது வழக்கு சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜராவதற்கு மட்டுமே தஞ்சைக்கு வந்து சென்றார் இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக தஞ்சைக்கு வந்த சாமிநாதன் ஒரு வழக்கு சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜராகி விட்டு தனது வீடு இருக்கும் பகுதிக்கு சென்றார் அங்கு தனது அத்தை மகனான ஹரிஹரன் என்பவரை சாமிநாதன் சந்தித்துள்ளார்.
சாமிநாதனின் அண்ணன் விஜியை கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்களுடன் ஹரிஹரனுக்கு தொடர்பு இருந்து வருவதாக சாமிநாதன் கேள்வி பட்டுள்ளார். மேலும் ஹரிஹரன் சில வாலிபர்களுடன் சேர்ந்து கொண்டு தனது வீடு இருக்கும் பகுதியில் அடிக்கடி சுற்றி வருவதாகவும் சாமிநாதனுக்கு தகவல் கிடைத்துள்ளது இது தொடர்பாக ஹரிஹரனிடம் கேட்ட சாமிநாதன் அவரை தாக்கியுள்ளார் இந்த விவரத்தை ஹரிஹரன் தனது நண்பரான சுந்தரபாண்டியன் நகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் தெரிவித்துள்ளார் இதனை எடுத்த முத்துக்குமார் ஹரிஹரன் இருவரும் மோட்டார் சைக்கிளில் மீண்டும் பொன்னேரி பாளையம் வந்து சாமிநாதனிடம் தட்டி கேட்டனர் அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் சாமிநாதன் முத்துக்குமாரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது இதை அடுத்து முத்துக்குமார் தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு ஹரிஹரனுடன் தப்பி ஓடி விட்டார்.
இதனைத் தொடர்ந்து முத்துக்குமார் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை சாமிநாதன் எடுத்துக்கொண்டு அவரது ஏரியாவான சுந்தர பாண்டியன் நகருக்கு சாமிநாதன் சென்றுள்ளார் அப்போது சுந்தரபாண்டியன் நகர் பிருந்தாவன் ஆர்ச் அருகே ஹரிஹரன் முத்துக்குமார் மற்றும் அவர்களது நண்பர்கள் உட்பட ஆறு பேர் சேர்ந்து சாமிநாதனை சுற்றிவளைத்து அறிவாளால் சரமாரியாக வெட்டினர் இதில் சாமிநாதனின் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது அவர் எழுப்பிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர் உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சாமிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சாமிநாதனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ரவளி பிரியா உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் நித்தியா மேற்பார்வையில் கள்ள பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் சப் இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்து தனிப்படையை போலீசார் சாமிநாதன் கொலையில் ஈடுபட்ட நபர்களை வலை வீசி தேடி வந்தனர் இந்த நிலையில் தஞ்சை அருகே எட்டாம் நம்பர் கரம்பையிலிருந்து ரெட்டிப்பாளையம் சுடுகாடு அருகே சாமிநாதன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த ஆறு பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர் பின்னர் ஆறு பேரையும் போலீசார் கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர் இது குறித்து களப்பரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தஞ்சை பொந்தேரி பாளையம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் சுந்தரபாண்டியன் நகரை சேர்ந்த முத்துக்குமார் முத்துக்குமாரின் தம்பி பங்கஜ்குமார் பள்ளியக்கரகாரம் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் காமாட்சி அம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்த மாதவன் பிருந்தாவன் பகுதி இ எம் ஜி நகரை சேர்ந்த அபி சாய் ஆகிய ஆறு பேரையும் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Tags :