நாம் அவர்களுடன் துணைநிற்க வேண்டும்” - சச்சின் இரங்கல் பதிவு

by Editor / 23-04-2025 04:05:14pm
நாம் அவர்களுடன் துணைநிற்க வேண்டும்” - சச்சின் இரங்கல் பதிவு

காஷ்மீர் தாக்குதல் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துயரமான தாக்குதல்களால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு வேதனையை சந்தித்துள்ளனர். உயிர் இழப்புக்கு நாம் இரங்கல் தெரிவித்து நீதிக்காகப் பிரார்த்தனை செய்யும் இந்த இருண்ட நேரத்தில், இந்தியாவும் உலகமும் அவர்களுடன் துணைநிற்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via