பாலியல் கூட்டு குற்றவாளிகளாக சீமானும், கே.டி.ராகவனும் செயல்படுகின்றனர்

by Admin / 02-09-2021 05:16:05pm
பாலியல் கூட்டு குற்றவாளிகளாக சீமானும், கே.டி.ராகவனும் செயல்படுகின்றனர்

 

 பாலியல் கூட்டு குற்றவாளிகளாக சீமானும், கே.டி.ராகவனும் செயல்படுகின்றனர் என தமிழக மகிளா காங்கிரஸ் கமிட்டி பெண்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

  சத்தியமூர்த்தி பவனில்,  மகிளா காங்கிரஸ் சார்பில் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்     சீமான் பாலியல் சம்பவங்களின் ஒருங்கிணைப்பாளராக மாறிவிட்டதாக குற்றம்சாட்டிய தீர்மானமும்  இடம்பெற்றிருந்தது.
 
,மோடி பிரதமரான பிறகு இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. என்றும் கே.டி.ராகவன் தனது கட்சி பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வீடியோ பெண்களுக்கு அச்சுறுத்தல் ,  பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.

 ராகவனுக்கு துணை போகும் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என  கோரிக்கை வைத்தோம்   சீமானை சும்மா விடமாட்டோம்  சீமானின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.  

 

Tags :

Share via

More stories

Logo