எது “நன்நெறி” என்பதை தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது. -மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

by Editor / 06-09-2024 12:14:39pm
எது “நன்நெறி” என்பதை தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது.  -மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

எது “நன்நெறி” என்பதை தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது.மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:பாஜக ஆளும் மாநிலம் ஒன்றில் ஓராண்டுக்கு முன் நாடாளுமன்ற கல்வி நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டோம்.அங்கன்வாடி ஊழியர்கள் கிராமத்தில் உள்ள கோயில்களை தூய்மைப்படுத்தும் பணியும், அங்கு குழந்தைகளுக்கு போதிப்பதைப் பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அப்போது அந்த மாநிலத் தலைமைக் கல்வி அதிகாரி "கோயிலில் பாவ புண்ணியத்தைப் பற்றிப் போதிக்காமல் ஒருவனுக்கு வாழ்வியலை எப்படி போதிக்க முடியும்?" என்று கேட்டார்.இன்று அதே கேள்வியை தமிழ்நாட்டு அரசுப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்து ஒருவர் கேட்கிறார்.மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியரைப் பார்த்து, "உங்கள் பெயரென்ன?" என்று கேட்கிறார்.

அந்த ஆசிரியரின் பெயர் ஜான்சன் ஆகவோ, ஜாஹீர் உசேனாகவோ இருந்திருந்தால் இன்று முதல் பள்ளிக் கல்வி பற்றிய பிரச்சனை ஆர். என். இரவியிடமிருந்து ஹெச். ராஜா வுக்கு மாற்றப்பட்டிருக்கும்.
அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள்.இவ்வாறு -சு.வெங்கடேசன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

 

Tags : மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

Share via