இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பதற்றம் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

by Editor / 12-07-2022 05:33:33pm
இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பதற்றம் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கில்காடுங்கலூர் கிராமத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பதற்றம் நிலவும் சூழலில் அங்கு 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வந்த தேவன் என்ற இளைஞர் நேற்றுமுன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை உறவினர்கள் தேடியபோது விளாங்காடு கூட்டுச்சாலையில் தேவனின் பைக் செல்போன் காலணிகள் ரத்தக்கறையுடன் இருந்ததாக போலீசில் புகார் அளித்தனர். புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்த போலீசார் காலையில் விளாங்காடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் தேவனின் சடலத்தை மீட்டனர். சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்ததில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தேவன் அடித்து கொலை செய்யப்பட்டு சடலம் கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via

More stories