துணை ஆணையர் தீபா சத்யன் மீது நடவடிக்கை

by Staff / 12-09-2023 03:09:51pm
துணை ஆணையர் தீபா சத்யன் மீது நடவடிக்கை

செப்டம்பர் 10ஆம் தேதி இசிஆர் சாலையில் உள்ள ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் போக்குவரத்து பாதிப்பு காரணமாக முதல்வர் வாகனமும் டிராபிக்கில் மாட்டிக் கொண்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தை முறையாக கையாளாததால் இணை ஆணையர் திஷா மிட்டலும் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo