தீப ஒளி திருநாளுக்கு மது விற்பனை அதிகரிப்பது சாதனையல்ல அவமானம்" - ராமதாஸ்

by Staff / 25-10-2022 01:36:13pm
தீப ஒளி திருநாளுக்கு  மது விற்பனை அதிகரிப்பது சாதனையல்ல அவமானம்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளில் ரூ.259 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தீபஒளி நாளன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு தீபஒளி திருநாளுக்கு முதல் நாளில் ரூ.205 கோடிக்கும், தீப ஒளி நாளில் ரூ.225 கோடிக்கும் மது விற்பனையான நிலையில், அதை விட இந்த ஆண்டு அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறது. மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் சாதனையல்ல அவமானம். இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via