மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

by Staff / 31-05-2023 01:39:28pm
மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், கடந்த 20 ஆண்டுகளில் ஜப்பான் நாட்டினரின் வருகை உயர்ந்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்த கடிதத்தில், “டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்தியாவில் ஜப்பானிய சமூகத்தின் மிகப்பெரிய தாயகமாக சென்னை திகழ்வதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo