உணவின் சுவையை கூட்ட சேர்க்கப்படும் செயற்கை பொருட்களால்ஆபத்து !

by Editor / 05-10-2021 06:07:31pm
உணவின் சுவையை கூட்ட சேர்க்கப்படும் செயற்கை பொருட்களால்ஆபத்து !

உணவு பொருட்களின் சுவையை பாதுகாக்க அவற்றின் தோற்றம், சுவை உள்ளிட்ட பிற குணங்களை அதிகரிக்க உணவில் கூடுதலாக சில பொருட்கள் சேர்க்கப்படும். இவை உணவு சேர்க்கைகள் (food additives) என்று குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக தற்போதைய நவீனகால வாழ்க்கை முறையில் பேக்கேஜ் மற்றும் இன்ஸ்டன்ட் உணவுகளுக்கான தேவை அதிகரித்து காணப்படுவதால், உணவின் உபயோகிக்க கூடிய நாட்களை அதிகரிக்கவும் சுவையை மேம்படுத்தவும் உணவு சேர்க்கைகள் அதிக அளவு கலக்கப்பட்டு வருகின்றன.

அப்படி கலக்கப்படும் உணவு சேர்க்கைகள் கெமிக்கல்களை கொண்டுள்ளன. புற்றுநோய், நீரிழிவு, இதய நோய், உடல் பருமன் மற்றும் பல ஆரோக்கிய கோளாறுகளை இந்த கெமிக்கல்கள் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு சேர்க்கைகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல நம் மாட்டில் இன்னும் புழக்கத்தில் உள்ளன. ஹைட்ரோஜெனேட்டட் கொழுப்புகள் (Hydrogenated Fats): ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள் (trans-fatty acids) LDL எனப்படும் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு மாரடைப்பு, புற்றுநோய், அல்சைமர், நீரிழிவு மற்றும் உடல் பருமன் அபாயத்தையும் கணிசமாக உயர்த்துகிறது. எனவே 'hydrogenated' அல்லது 'shortening and margarine' என்று குறிப்பிடப்படும் மூலப்பொருளை கொண்ட உணவு தயாரிப்புகளை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.செயற்கை நிறங்கள் (Artificial Colours): செயற்கை நிறங்களை கொண்ட உணவுகள் கவனக்குறைவு, கவனச்சிதறல் மற்றும் மோசமான நினைவாற்றல் அறிகுறிகளுடன் வலுவான தொடர்புகளை கொண்டவை என்று குழந்தை நல மருத்துவர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சன்செட் யெல்லோ, பிரில்லியன்ட் ப்ளூ , சிட்ரஸ் ரெட், அமராந்த் மற்றும் இண்டிகோ கார்மைன் போன்ற பெயர்கள் தீங்கற்றதாக தோன்றலாம், ஆனால் சில தீவிர பக்க விளைவுகள் மற்றும் உறுப்பு கோளாறுகளுடன் இந்த செயற்கை நிறங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

சில நேரங்களில் ஒவ்வாமை எதிர்வினைகள் , மோசமான ஆஸ்துமா அறிகுறிகள். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்டவற்றுக்கும் காரணமாகின்றன.ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் (​Antioxidants): ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உணவின் வீரியத்தை தாமதப்படுத்தும் அல்லது தடுக்கும் திறன் கொண்ட சேர்க்கைகளாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள் கெட்டுப் போவதைத் தடுக்க உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் பியூடிலேட் ஹைட்ராக்ஸியானிசோல் (E320) போன்றவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியாக பார்க்கப்படுகிறது. விலங்குகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் Propyl Gallate கட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. TBHQ (E319) போன்ற மற்றவை மிகவும் அபாயகரமானவை என்பதால் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.பொட்டாசியம் ப்ரோமேட் (Potassium Bromate): நீங்கள் வாங்கி பயன்படுத்தும் பிரெட் அல்லது ரொட்டியை நன்கு திடமாக்க உதவும் கூழ்ம பொருட்களை வாங்கும் போது அதில் பொட்டாசியம் ப்ரோமேட் பயன்படுத்தப்படவில்லை என்பதை சரி பார்த்து விட்டு பின்னர் வாங்குங்கள். புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் இதில் அதிகம் இருப்பதாக புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் கூறி இருக்கிறது.

செயற்கை இனிப்புகள் (Artificial Sweeteners): உடல் பருமன், வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை செயற்கை இனிப்புகள் ஏற்படுத்தும். குறிப்பாக சுக்ரோலோஸ் குடல்-நட்பு பாக்டீரியாவை அழிப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via