கார்த்திகை தீப விழா -நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை.

by Admin / 11-12-2024 06:02:02pm
கார்த்திகை தீப விழா -நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை.

கார்த்திகை தீப விழா டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.சிவ  தலத்தில் அக்னி ஸ்தலமாக வழிபடப்படும் திருவண்ணாமலை தீபத்திருநாள் நாளை மறுநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது

. இந்தியா எங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதனால் உள்ளூர் நிர்வாகம் 9 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வர வைக்கப்பட்டு அங்குள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இத்தீபா திருவிழாவின்போது மகா தீபம் ஆனது 5 அடி உயரம் 250 கிலோ எடை கொண்ட எடை கொண்ட கொப்பறையில் 3500 லிட்டர் நெய் கொண்டு ஆயிரம் மீட்டர் பருத்தி துணியால் திரிக்கப்பட்ட திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டு பதினோரு நாட்கள் தீபம் எரிய செய்வது ஐதீகம்..

பஞ்ச பூதங்களில் பரம்பொருள் சிவன் அக்னி வடிவத்தில் காட்சி தருகிறார் என்பது காலங்காலமாக நம்பப்படும் நம்பிக்கையின் வெளிப்பாடு, இத்தீபத் திருவிழா.

 

கார்த்திகை தீப விழா -நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை.
 

Tags :

Share via