ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by Staff / 07-12-2023 12:15:42pm
ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் உருவாகி பின் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இரண்டு முறை ஆட்சி செய்த பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று நண்பகலில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்கிறார். இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல், சோனியா உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo